;
Athirady Tamil News

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பிரதேச செயலகங்கள் அமைக்க கலந்துரையாடல்..!!

0

கிழக்கு மாகாணத்தின் உள்ள தோப்பூர், கல்முனை மற்றும் கோரளைப்பற்று போன்ற பகுதிகளில் பிரதேச செயலகங்களை ஸ்தாபித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

அமைச்சின் பத்தரமுல்ல காரியாலயத்தில் இன்று காலை அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதேச செயலகங்களை தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்வதாக வஜிர அபேவர்தன வாக்குறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, ஹரீஸ், முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*