;
Athirady Tamil News

மூன்று பிள்ளைகளின் தாய் திடீரென உயிரிழந்தமை குறித்து விசாரணை..!!

0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுனிபில்ட் தோட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீர் என உயிர் இழந்துள்ளமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

11ம் திகதி இரவு குறித்த பெண் இறந்த நிலையில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொட்டகலை யுனிபில்ட் தோட்ட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஆர். வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் பிரரேத பரிசோதனை, பிரதேச மரண விசாரணையாளரினால் மேற்கொண்ட போதிலும் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − ten =

*