;
Athirady Tamil News

ஐ.தே.க மற்றும் த.தே. கூட்டமைப்பு கூட்டணியே நாட்டில் ஆட்சி செய்கின்றது: தயாசிறி ஜயசேகர..!!

0

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் கூட்டணியே நாட்டில் ஆட்சி செய்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்ஜே.வி.பி.யினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தது.

தனியான பிரதேச செயலகம் (கிழக்கில்) ஒன்றை பெற்றுத் தருவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது.தற்போதைய அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக 50 மில்லியன் ரூபாய் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + seventeen =

*