;
Athirady Tamil News

வெளிநாட்டு சிகரட்களுடன் தம்பதியினர் கைது…!!

0

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், கிரிஉல்ல பகுதியை 29 வயதுடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் 5 மற்றும் 7 வயதுடைய சிறு குழந்தைகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் நேற்று (12) இரவு 7.40 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 652 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த நபர்களின் பயணப் பொதியில் இருந்து 64,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 3,230,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களுக்கு 75,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + two =

*