;
Athirady Tamil News

ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் 9 பேர் கைது..!!

0

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபேரத்ன மாவத்தை பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து வெளிநாட்டு சிகரட்கள் 63 மற்றும் போதைப்பொருள் பாவிப்பதற்காக உபகரணங்கள் 4 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குஷ் போதைப்பொருள் 45 மில்லிகிராம் மற்றும் ஐஸ் 5 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (13) அதிகாலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் அவ்விடத்திற்கு சென்ற போது அவ்வீட்டில் களியாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 25 வயதிற்கு உட்பட்ட தெஹிவல, தலங்கம, அநுராதபுர, கட்டுநாயக்க, மொரட்டுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 16 =

*