;
Athirady Tamil News

கூட்டுறவுத் துறையின் அபிவிருத்தியை பலப்படுத்த முயற்சி..!!

0

அழிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையின் அபிவிருத்திகளை பலப்படுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் எதிர்காலத்தில், இன்னும் சிறப்புற கூட்டுறவுத் துறை தனது சேவையைச் செய்யுமெனவும் யாழ்.மாவட்ட கூட்டுறவுத் துறை ஆணையாளர் பொ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று 97ஆவது கூட்டுறவுத் துறை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதையடுத்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர்,சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு அமைப்பு கூட்டுறவு.

கூட்டுறவுச் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை அடைய வேண்டுமென்பதற்காக இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.கூட்டுறவுத் துறை தொடர்பாக மீளவும் ஒரு முறை மீட்டிப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. கூட்டுறவுத் துறை 525,000 அங்கத்தவர்களைக் கொண்டது.தன்னிறைவுப் பொருளாதாரத்தில் போட்டி காரணமாகவும், தனியார்களின் போட்டி காரணமாகவும் கூட்டுறவு பாதிக்கப்பட்டுள்ளமை உண்மை.

கூட்டுறவுக் கிளைகளைப் பலப்படுத்துவதன் ஊடாக வியாபாரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போட்டி வியாபாரமும், போசணை வியாபாரத்திற்கும் முன்னுரிமை அளித்து வருகின்றமையினால், கூட்டுறவுத் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கூட்டுறவுத் துறை புத்தாக்கம் பெற வேண்டுமென்பதற்காக பல உத்திகளை கையாண்டு வருகின்றோம்.கூட்டுறவுத் துறை காலப்போக்கில் வெற்றிபெறும் என்பது எமது நம்பிக்கை. கூட்டுறவுத் துறையின் நிதி சார்ந்து, கூட்டுறவு சங்கங்கள், கிராமிய வங்கிகள் திறம்பட இயங்கி வருகின்றன.

கூட்டுறவு மற்றும் மத்திய வங்கியின் ஆசீர்வாதத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் 500 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டன.இந்த வருடம். 250 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாற்று கிராம மட்ட அயலக உதவியாக, கூட்டுறவு அபிவிருத்தி கடன் திட்டம் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இதில், யாழ்.மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 4 =

*