;
Athirady Tamil News

சுன்னாகம் கிழக்கு அலட்டன் வைரவர் கோயில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்..!! (படங்கள் )

0

யாழ். சுன்னாகம் கிழக்கு அலட்டன் வைரவர் கோயில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + five =

*