;
Athirady Tamil News

வவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்…!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க. உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07) காலை 9.30மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் இடம்பெற்று மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றிருந்தது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், பிரதேசசபை உறுப்பினர்களான யோகன், உத்தரியநாதன், நந்தன், ஜெகதீஸ்வரன், குகதாசன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*