;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி திடீர் விஜயம்..!! (படங்கள்)

0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று மதியம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அங்கு சென்று அபிவிருத்தி குழு நிர்வாகத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி செந்தூர்பதிராஜா, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டிபன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடினர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது, குறைப்பாடுகளை பிரதமருடனும், மத்திய சுகாதார அமைச்சரிடமும் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்ததுடன், ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடும் போது மன்னார் பொது வைத்தியசாலை மிகவும் பின் தங்கி காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் பகுதி, குடி நீர், மின்சாரப் பகுதி, நோயாளர் விடுதி, உள்ளிட்ட இடங்கள் இதன்போது பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 3 =

*