;
Athirady Tamil News

ஜனாதிபதி மைத்திரி லண்டன் சென்றமைக்கான காரணம் என்ன…!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட விஜயமாக லண்டன் சென்றமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தனது மகன் தஹாம் சிறிசேகவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவே இங்கிலாந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.அதற்கமைய மகனின் பட்டதாரி பட்டத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இலங்கையில் இருந்து சென்ற ஜனாதிபதி நேற்று நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்று கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − eight =

*