;
Athirady Tamil News

பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..!! (படங்கள்)

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான கில்லஸ் டி கெர்ச்சோவ் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான தனது முயற்சியில் ஆதரிப்பதும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சிறந்த கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் கில்லஸ் டி கெர்ச்சோவ் வருகை தந்துள்ளார் என எதிர் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் கூட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், நானும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு விடயங்களில் அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.

ஜனாதிபதி பதவியின் போது தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும், தற்போதைய சூழலில் கூட, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 6 =

*