;
Athirady Tamil News

சஹ்ரான் குழுவினர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

0

சவுதியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த அஹ்மத் மிலன் என்பவரே குண்டுத்தாக்குதல்களுக்கு பயன்படுத்திய வெடிகுண்டுகளைத் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்ட்ட விசாரணையின் போதே இது குறித்து சாட்சியம் வழங்கியுள்ளார்.சஹ்ரான் தலைமையிலான இந்த பயங்கரவாத குழுவின் ஆயுத தயாரிப்பிற்காக கிழக்கில் ஐந்து வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கல்முனையைச் சேர்ந்த சியாம் மற்றும் முகமது நிசான் இதற்கு உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.நீர்கொழும்பில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் லொறியொன்றின் மூலம் சம்மாந்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் சாரதியான பிரசன்னா என்பவரிடம், தங்கத்தை சுத்தம் செய்யும் இரசாயனங்கள் எனக்கூறியே பீப்பாய்கள் ஏற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு வெடிபொருட்களை அனுப்பிய தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, சஹ்ரான் ஹாஷிமுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற பயங்கரவாதி மகரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 17 =

*