;
Athirady Tamil News

மோசடி செயலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்…!!

0

திருகோணமலை பகுதியில் கடைகளை உடைத்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சோபித்தகம,லவ்லேன்,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கெதிராக ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்தமை,கடைகளை உடைத்து திருடியமை போன்ற வழக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் கடையை உடைத்து கொள்ளையிட்ட குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட நிலையிலேயே திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − five =

*