;
Athirady Tamil News

சிங்கள மக்களின் ஆதரவினை இழந்த ஐக்கிய தேசிய கட்சி…!!

0

சிங்கள மக்களின் பெரும்பான்மை விருப்பு இனி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்துக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது.

சிங்கள பெரும்பான்மையினரின் கருத்துக்கள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது.

விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தரப்பினர் இடைப்பட்ட காலத்தில் தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற நம்பிக்கையை வெற்றிக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இனி ஒருபோதும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − nine =

*