;
Athirady Tamil News

ஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…!!

0

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு வந்த நம்பிக்ைகயில்லைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்அரசாங்கத்தின் மீது நம்பிக்ைக இருக்கின்றது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்பு இரண்டு தடவை நம்பிக்ைகயை நிரூபித்துள்ள அரசாங்கத்திற்கு ஜேவிபியின் பிரேரணை மூலம் மீண்டும் புதுத் தெம்பு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் தோல்வியுறாது என்பது தெரிந்திருந்தும் ஜேவிபி இப்படியொரு பிரேரணையைக் கொண்டுவந்தது ஏனென்ற கேள்விதான் இப்போது முதன்மை பெற்றுள்ளது.

இலங்கை அரசியலில், சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையிலான நெருக்கடி நிலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், இவ்வாறானதொரு பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்த்தது என்ன?

ஏனெனில், நாட்டின் அரசியலமைப்பின் 48 (2) சரத்தின்படி பிரதமருக்கு எதிராக நம்பிக்ைகயில்லா பிரேரணையொன்று கொண்டு வர முடியாது. ஓர் அமைச்சருக்ேகா அல்லது ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவோ மாத்திரமே நம்பிக்ைகயில்லா பிரேரணை முன்வைக்க முடியும்.

அமைச்சராலோ அரசாங்கத்தினாலோ, நாட்டைக் காப்பதற்கான பொறுப்பு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், ‘இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்ைக இல்லை’ என்று பிரேரணை கொண்டு வர முடியும். அப்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அமைச்சரும், அமைச்சரவையும் பதவியைத் துறக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு நிலை உருவானால், என்ன நடக்கும்?

முழு அமைச்சரவையும் கலைந்துவிடும்; புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்; முன்பு பதவியில் இல்லாதவர்களைப் புதிய அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டும்.

அல்லது பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்!

தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியுமா?

முடியாது!

ஏனெனில், 70ஆவது சரத்து திருத்தப்பட்டதற்கமைய, பாராளுமன்றத்தின் ஆயுட்காலம்’ நான்கரை ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்படுவதாக இருந்தால், அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை நிறைவேற்ற வேண்டும். 2015 ஓகஸ்டில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் தொடங்குகிறது.

அவ்வாறென்றால், 2020 பெப்ரவரியில்தான் நான்கரை ஆண்டு காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னர் கலைப்பதென்றால், தற்போதைய நிலவரத்தின்படி, பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றிப் பாராளுமன்றத்தைக் கலைப்பதென்பது இயலாத விடயம். அவ்வாறெனின், புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், நாட்டின் அரசியல் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்து ஸ்திரமற்ற நிலைக்குச் செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்-?

இந்த நிலையைக் கருத்திற்கொள்ளாமல்தானா ஜேவிபி நம்பிக்ைகயில்லா பிரேரணையைக் கொண்டுவந்தது? ஆகவே, தனது செல்வாக்ைக நிலைநிறுத்திக்ெகாள்வதற்காக மேற்கொண்ட முயற்சி என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ விமர்சித்திருக்கிறார்.

பிரேரணை தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் 75பேர் ஆதரவளித்தால், ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வரத் தயார் என்று தெரிவித்திருக்கிறார் ஜேவிபியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. இப்போதைய அரசியல் நிலைவரத்தின்படி, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை முன்வைப்பதாகவிருந்தால், ஆளுந்தரப்பினரின் ஆதரவைப் பெறுவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்காது என்பதை அறிந்தே அநுரகுமார திசாநாயக்க அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அரசாங்கத்துக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருப்பது ஜேவிபியின் முயற்சிக்குப் பெரும் அரசியல் சாட்டையடியாகவே கருதப்படுகிறது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.

இஃது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்ெகாண்டிருக்கின்றோம்; இறுதிக்கட்டத்தில் முடிவு எடுப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறுதி நேரத்திலும் தெரிவித்திருந்தார். அப்போது கூட்டமைப்பினர் இப்படித்தான் என்றும் விமர்சித்தார்கள்.

ஆனால், இந்தக் கட்டத்தைப் பயன்படுத்தியாவது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்று கூட்டமைப்பு நினைத்திருக்கக்கூடும். கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு இறுதி நேரத்தில் கைகூடிவரவே, அரசாங்கத்திற்கு ஆதரவாகக் கூட்டமைப்பு வாக்களித்திருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துமிந்த திஸ்ஸாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

எதிரணியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரேரணையில் பதின் மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என முற்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்பதே நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்த முக்கியமான குற்றச்சாட்டு.

ஜே.வி.பி சமர்ப்பித்திருந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆறு பேர் கைச்சாத்திட்டிருந்தனர். இதனை இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பது எனக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமையவே பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்ெகடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் ஜேவிபியின் பிரேரணை தோல்வி கண்டது.

ஏற்கனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்போதைய அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரால் நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. றிஷாத் பதியுதீன் எம்.பி.அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததும் அந்தப் பிரேரணை நீர்த்துப்போனது.

இப்போது மீண்டும் அவர் அமைச்சுப் பதவியை ஏற்றால், நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று தேரர் எச்சரித்திருக்கிறார். அமைச்சர் மீது பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமானால், அஃது முழு அமைச்சரவையையும் பாதிக்கும் என்கிறது அரசியலமைப்பு.

ஆனால், றிஷாத் பதியுதீன் மீது தவறுகள் கிடையாதென்று இராணுவத் தளபதி உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள்.அவர் எந்தவித பயங்கரவாத நடவடிக்ைகயிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்திருக்கும் நிலையிலேயே அவர் மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் காலங்கடந்திருக்கிறது. கடந்து வந்த இந்தக் காலப் பகுதியில் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. பல குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது.

ஆனால், இன்னமும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில், அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சவாலை மூன்றாவது தடவையாகவும் அது முறியடித்திருக்கிறது.

உண்மையில், தன் மீதான கறைகளைக் கழுவிக்ெகாண்டு புதுத் தெம்புடன் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கே வழிசமைக்கப்பட்டிருக்கின்றது என்றுதான் அரசாங்கம் நினைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 4 =

*