;
Athirady Tamil News

வடபழனியில் 3-வது மாடியில் இருந்து விழுந்து டிரைவர் பலி..!!

0

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 28) கார் டிரைவர்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடபழனி பெரியார் பாதையில் உள்ள வீட்டின் 3-வது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கார் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பெரியசாமி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வடபழனிஇன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரியசாமி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 4 =

*