;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் கொத்தாக கொல்லப்பட்ட 16 பசு மாடுகள்: வேதனையில் விவசாயி கூறிய வார்த்தை..!!

0

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் விவசாயி ஒருவரின் 16 பசு மாடுகள் மின்னல் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் தமது வேதனையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் பண்ணை வைத்திருக்கும் விவசாயி நிக்கோலாஸ் ஜோட்டெராண்ட்.

இவரது பண்ணையில் உள்ள 16 பசு மாடுகள் மின்னல் தாக்கியதில் கொத்தாக கொல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமது தொழிலில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவு என குறிப்பிட்டுள்ள நிக்கோலாஸ்,கொல்லப்பட்ட பசு மாடுகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை எனவும், பல ஆண்டுகளின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, மேலும் 4 அல்லது ஐந்து ஆண்டுகளின் கடின உழைப்பால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பசுமாடுகளை வளர்த்தெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கும் என்றாலும், அந்த பணத்தால் இழந்த பசுமாடுகளை கண்டிப்பாக மீட்க முடியாது எனவும் நிக்கோலாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் ஆண்டுக்கு 15 முதல் 20 வரையான எண்ணிக்கையிலேயே ஏற்படும் என கூறும் காப்பீடு நிறுவனம், கொத்தாக 16 பசு மாடுகள் கொல்லப்பட்டுள்ளது உண்மையில் அசாதாரணமானது என தெரிவித்துள்ளது.

சம்பவத்தன்று மேற்கு சுவிட்சர்லாந்தில் கடுமையான புயல் தாக்கியுள்ளது. மின்னல் வெட்டியதால் அப்போது மேய்ந்துகொண்டிருந்த பசு மாடுகள் பாதுகாப்பு கருதி மரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளது

அந்த வேளையில் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது, அந்த தாக்கத்தில் நிக்கோலாசின் பசு மாடுகள் 16 எண்ணம் கொத்தாக மரணமடைந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*