;
Athirady Tamil News

திருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த இருவர் கைது…!!

0

திருகோணமலையில் வெவ்வேறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு இருபது மாதங்களாக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவினை தாபரிப்பு பணமாக செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலாவெளி, அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் மற்றும் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளைக்கு ஐந்து மாதங்களாக இருபத்தைந்தாயிரம் ரூபாயினை தாபரிப்பாக செலுத்தாத திரியாய், செந்தூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*