;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு…!! (படங்கள்)

0

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(14) கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கை உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் திறந்து வைத்து கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் தந்தையின் நினைவாக நிர்மாணிக்கப்படட இந்த விளையாட்டு அரங்கின் அங்குராப்பண நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ். தௌபீக் , சந்தீத் சமரசிங்க, துரைரட்ணசிங்கம்,மத்திய மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், நகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*