;
Athirady Tamil News

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி!! (படங்கள்)

0

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் (14) இன்று மாலை அஞ்சலி செலுத்தியிருந்தார்.

நாளை மாலை 3.30 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெறும், ஆன்ம இளைப்பாற்று திருப்பலியை தொடர்ந்து அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் ஆன்ம இளைப்பாற்று ஆத்ம சாந்திக்காகவும், அடையாளமிக்க ஆன்மீக சேவையின் ஐக்கியத்தை உணர்த்தும் முறையிலும் அனைவரையும் பிரார்த்திக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய பிதா அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அவர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் இரங்கலை தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*