;
Athirady Tamil News

அடிப்படை உரிமைகள் உள ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டும் – அங்கஜன்!! (படங்கள்)

0

காரைநகர் கருங்காலி பிரதேசத்தில் வேரக்குளம் மற்றும் சலவை குளத்தின் தூர் வாரப்பட்ட பணிகள் நிறைவடைந்து 14/07/2019 அன்று மாலை “நீரின்றி அமையாது உலகு” என்னும் தொனிப்பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றிருந்தது.

காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகால தேவையும் வைத்திய கலாநிதி பரா நந்தகுமாரின் கோரிக்கைக்கு அமைவாக எனது வழிகாட்டல் மற்றும் நிதி ஒழுங்கமைப்பில், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் என் வேண்டுகோளிற்கு அமைவாக பாதுகாப்பு படையினரின் பூரண பங்களிப்பினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக, காரைநகர் பிரதேசத்தின் நீர் பற்றாக்குறையை தீர்த்து பசுமைமிக்க பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு தற்போது வெற்றியளித்துள்ளதாகவும், கிராம சக்தி செயற்திட்டதின் ஊடாகவும் ,உட்கட்டுமான வேலைத்திட்டத்தின் மூலம் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேசத்தில் 20 க்கும் மேற்ப்பட்ட பொது கிணறுகள் துப்பரவு செய்யப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருப்பதோடு,பொது கேணிகள்,மற்றும் ஆலய கேணிகளும் துப்பரவு செய்யப்பட்டு குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. உவர் நீரை தடுப்பதற்கு நன்னீர் தடுப்பணைகளை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தூர் வாரப்பட வேண்டிய குளங்களின் தரவுகள் காணப்படுவதாகவும் உலக தமிழ் உறவுகள் ஒவ்வொருவரும் ஒரு குளத்தை புனர் நிர்மாணம் செய்தால் குடி நீர் இன்றி இடம் பெறும் இடப்பெயர்வையும் எமது இருப்பையும் தக்க வைத்து கொள்ளலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் உலக தமிழரிடம் மீண்டும் கோரிக்கையினை முன்வைப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

தாம் பணி புரியும் இடத்தை விட அதிகமாக சொந்த இடமாக கருதி உளப்பூர்வமான பணியை முன்னெடுத்திருந்தமையோடு, ஐக்கியத்தை உணர்வு ரீதியாக ஏற்படுத்தி மக்களின் அடிப்படை உரிமையை நிறைவு செய்தமை திருப்தி அளிப்பதாகவும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதியாக தர்சன ஹெட்டியாராச்சி அவர்கள் சிறந்த பணியை முன்னேடுத்திருந்ததோடு,துரதிஷ்டமான சம்பவங்களில் இருந்தும் எமது மக்களை பாதுகாத்தமைக்கும் நன்றிகளை தெரிவித்தார். மேலும் புதிதாக நியமனம் பெறும் கட்டளை தளபதியும் எமது மக்களுக்கு தேவையான மனித நேய பணிகளை தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு. நிசாந்தன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. முரளிதரன், காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி ஊஷா, வட்டுகோட்டை தொகுதி அமைப்பாளர் றஜீகரன் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் உட்பட, கிராமசக்தி மக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பெருமளவிலானோர் இணைந்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + ten =

*