;
Athirady Tamil News

ஹெரோயின் வைத்திருந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!!

0

ஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபொதி குறித்த தண்டனை இன்று வழங்கியுள்ளார்.

கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த கங்கானம் பத்திரகே சுராஜ் குமார என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி குறித்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் மீது விடுக்கப்பட்டிந்த குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இன்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*