;
Athirady Tamil News

முத்துமாரியம்மன் கோவில் வீதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!! (படங்கள்)

0

சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்வீதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
யாழ். சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்விதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (14.07.2019) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*