;
Athirady Tamil News

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்கள் கைது!!

0

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 20 மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுமார் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள், ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திய போது, கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும், யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*