வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!! (படங்கள்)
வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு குருமன்காடு நோக்கி செல்வதற்காக புகையிரத நிலைய வீதிக்கு திரும்பிய மோட்டர் சைக்கிளை வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வீதியோரத்தில் நிறுத்த்பட்டிருந்த மோட்டர் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு மாணவிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”