;
Athirady Tamil News

வவுனியாவில் 30வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

0

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் 30வது வீரமக்கள் தினம் இன்று (16) அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய இன விடுதலை போராட்டத்தில் இன்னுயிரை இழந்த போராளிகள் மற்றும் பொது மக்களை நினைவு கூர்ந்து கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட் அமைப்பினரால் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வானது தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உப தலைவரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் கலந்துகொண்டு கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் இறந்த போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது உமா மகேஸ்வரன் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு கழகத்தோழர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன் “இலங்கை அரசு தமிழ் மக்களுக்க பல வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் எதனையும் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களின் பிரச்சளைக்கு தீர்வை கொடுப்போன் என தெரிவித்த ஜனாதிபதி இன்று எதிர்மறையாக பேசுகிறார்.

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எடின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றதன் பின்னராகவே நாங்கள் அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தோம்” என குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”


You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 1 =

*