இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!! (படங்கள்)
கருவறையில் செந்தமிழில் வழிபாடு நடைபெறும் இணுவில் அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலிலே வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.07.2019) முதல் மிகவும் சிறப்பாக நடைபெற குருவருளும், திருவருளும் கைகூடியுள்ளது.
நாள்தோறும் பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஓவ்வொரு திருவிழா நிறைவிலும் மாகேசுர பூசையும் (அன்னதானம்) ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
சிவனடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக பெருந்திருவிழாவில் கலந்து கொண்டு தெய்வத் தமிழிலே எம்பெருமானை வழிபட்டு அருள் நிறையப் பெற்று உய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவிழா விபரம்
காலம் திருவிழா
01 19.07.2019 வெள்ளிக்கிழமை
மாலை 6.15 மணி முதல் அம்மையப்பன் திருக்கோலம்
02 20.07.2019 சனிக்கிழமை
மாலை 6.15 மணி ஐயமிரக்கும் திருக்கோலம்
03 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.15 மணி பிட்டுக்கு மண்சுமந்த திருக்கோலம்
04 22.07.2019 திங்கட்கிழமை
மாலை 6.15 மணி சயன திருக்கோலம்
05 23.07.2019 செவ்வாய்க்கிழமை
மாலை 6.15 மணி தென்முகக்கடவுள் திருக்கோலம்
06 24.07.2019 புதன்கிழமை
மாலை 6.15 மணி மாம்பழத் திருவிவிழா
07 25.07.2019 வியாழக்கிழமை
மாலை 6.15 மணி கையிலைக்காட்சி
08 26.07.2019 வெள்ளிக்கிழமை
மாலை 5.00 மணி வேட்டைத்திருவிழா
09 27.07.2019 சனிக்கிழமை
மாலை 6.00 மணி சப்பரத் திருவிழா
10 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி தேர்த்திருவிழா
11 29.07.2019 திங்கட்கிழமை
மாலை 6.00 மணி தீர்த்தவாரி
12 30.07.2019 செவ்வாய்க்கிழமை
மாலை 6.00 மணி பூங்காவனம்
13 31.07.201 புதன்கிழமை
மாலை 6.00 மணி வைரவர் மடை
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”