;
Athirady Tamil News

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மரம்!! (படங்கள்)

0

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 19.07.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

இம்மரத்தினை வெட்டி அகற்ற பிரதேசவாசிகள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 18 =

*