;
Athirady Tamil News

சர்வதேச கடல் எல்லைக்கு அடித்துச் செல்லப்பட்டஇலங்கை மீன்பிடி படகுகள்!!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைக்கு சென்ற ஆழ்கடல் படகுகள் 44 இந்தியா மற்றும் மலைத்தீவு கடற் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

இந்திய கடற் பகுதியில் 14 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் மலைத்தீவு கடற் பகுதியில் 30 ஆழ்கடல் படகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி கடற்றொழில் அமைச்சினால் அந்தந்த நாடுகளின் வௌிவிவகார அமைச்சுக்களுக்கு அறிவித்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*