;
Athirady Tamil News

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு!! (படங்கள்)

0

வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (19.07.2019) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

எதிர்வரும் புலமைப்பரிசில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிச்சம் அறக்கட்டளை, மற்றும் பாடசாலை பழைய மாணவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB BANK) நிதி பங்களிப்புடன் இவ் கருத்தரங்கு நடைபெற்றிருந்தது.

இக் கருத்தரங்கில் 100க்கு மேற்பட்ட தரம்5 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்ததுடன்
விருந்தினர்களான கல்லூரியின் அதிபர் சிவநாதன், வவுனியா வடக்கு வலயத்தின் விரிவுரையாளர் திரு.முரளிதரன் , தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன் மற்றும் செயலாளர் கார்த்திக் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் அபிவிருத்தி குழு, ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 2 =

*