;
Athirady Tamil News

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..!!

0

ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3 தளங்களுடன் மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்ட இந்த அனிமேஷன் ஸ்டூடியோ நேற்று முன்தினம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அங்கு 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஸ்டூடியோவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் ஸ்டூடியோ முழுவதும் பரவியது. வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.

மீட்புப் பணியில் வீரர்கள்

தகவலறிந்து கியோட்டோ நகர தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய 35 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + ten =

*