;
Athirady Tamil News

(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது!! (படங்கள்)

0

மன்னார் – மதவாச்சி வீதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203கிலோ கஞ்சா மீட்பு: சாரதி கைது

மன்னாரிலிருந்து கொழும்பிற்கு பாரஊர்தி ஒன்றில் நெல் மூட்டைகளுடன் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203கிலோ கேரளா கஞ்சாவினை பறயனாலங்குளம் பொலிசார் நேற்று இரவு 7 மணிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னாரிலிருந்து 194 நெல் மூட்டைகளை ஏற்றிய பாரஊர்த்தி ஒன்றிற்குள் மறைத்து 5 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்டபோது பறயனாலங்குளம் சந்தியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவை கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட கேரளா கஞ்சா 20 மில்லியன் ரூபாய் மெறுமதியுடைய 203கிலோ கஞ்சாவாகும்.

இது தொடர்பில் பாரஊர்தி சாரதியான கந்தையப்பிள்ளை தேவராஜ் என்ற 63வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*