;
Athirady Tamil News

நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!!

0

காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே மீனவர்கள் நாளை 21ஆம் திகதி காலை வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை 2019 ஜுலை 21ஆம் திகதி காலை வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − eight =

*