;
Athirady Tamil News

மானிப்பாய் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்!! (படங்கள்)

0

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 1 =

*