;
Athirady Tamil News

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி – சி.வி.விக்னேஸ்வரன்!! (படங்கள்)

0

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலானஅரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்! வாகரையில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

தமிழ் மக்களின் இருப்பினையும்உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்தவடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சிஅடிப்படையிலான தீர்வினை நாம்வலியுறுத்தி வருகின்றோம் என வாகரைகதிரவெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல்செயற்பாட்டினை வலுப்படுத்தும் வகையில்கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்து மக்கள்சந்திப்பு நிகழ்வுகளை மேற்கொண்டுவரும்சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று காலை10.30 மணிக்கு வாகரை பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட கதிரவெளி பகுதியில்நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்றுஉரையாற்றும் போதே இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரிவிக்கையில்….

தொழில்நுட்ப உதவியை உள்ளீர்த்து எமதுபிரதேசங்களின் இயல்பு மாறாது எழில்குலையாது எமது காலில் நாம்நிற்கக்கூடியதான அபிவிருத்தியைமேற்கொன்டு உங்கள் வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்துவதே எமது பிரதானநோக்கமாகும். அவ்வாறான செயற்றிட்டங்கள்உங்களால் முன்வைக்கப்படும் போதுபுலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன்நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஊடாகமேற்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள்முஸ்லீம்களது திட்டமிட்ட நடவடிக்கைகளால்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதைஅறியமுடிகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தமிழர்களுக்கு சொந்தமானகாணிகளை அதிக விலை கொடுத்து வாங்கும்செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதிக பணத்திற்குவாங்குகிறார்கள் என்பதற்காக இன்று நாம்எமது காணிளை முஸ்லீம்களுக்கோஏனையவர்களுக்கோ விற்போமாயின்எதிர்காலத்தில் எமது இருப்பே பெரும்கேள்விக்குறியாகிவிடும்.

குடும்ப வறுமை காரணமாகஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள்முஸ்லீம்களால் திட்டமிட்டு மதமாற்றம்செய்யப்பட்டு வரும் அவல நிலைஏற்பட்டுள்ளதை அறியும் போது உண்மையில்வேதனையாக இருக்கின்றது. இவ்வாறானநிலையில் இருந்து எமது பெண்களைமீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும்எமக்குண்டு. அந்த வகையில் உங்கள் உங்கள்கிராமங்களில் எளிதாக கிடைக்கக்கூடியமூலப்பொருட்களை கொண்டு செயற்படுத்தக்கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கிகொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு எமது இருப்பும் உரித்துக்களும்பறிபோகாதிருக்க வேண்டுமாயின் நம்மைநாம் பலப்படுத்திக்கொள்வதே ஒரேவழியாகும். அதற்காகத்தான் இணைந்தவடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சிஅடிப்படையிலான அரசியல் தீர்வுவேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம் என தமிழ் மக்கள்கூட்டணியின் செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மேலும்தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும்கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமானஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர்திருமதி ரூபா சுரேந்தர், மகளிர் அணி உபசெயலாளர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனிகெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர்செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்டஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர்கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர்இரா.மயூதரன், கணக்காளர்ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர்சதீஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்தபல்கலைக் கழக மாணவர்கள் மாலைஅணிவித்து விருந்தினர்களை அழைத்துச்செல்லப்பட்டதையடுத்து சி.வி.விக்னேஸ்வரன்ஐயா உள்ளிட்ட பிரமுகர்கள் மங்கலவிளக்கேற்றியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்தநிகழ்வை அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கே.ரூபன் அவர்கள் வரவேற்புரையைவழங்கியதுடன் தலைமை தாங்கிநடாத்தியிருந்தார். மருத்துவரும் சமூகசெயற்பாட்டாளருமான பு.சோதிராஜ் அவர்கள்தலைமையுரை ஆற்றியிருந்ததுடன்அப்பகுதியில் சட்டவிரோதமாகமேற்கொள்ளப்பட இருக்கும் இல்மனைற்மணல் அகழ்வு குறித்த ஆவணத்தொகுப்பையும் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களிடம் மக்கள் சார்பில்கையளித்திருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டாணியின் கொள்கைகள்குறித்து த.சிற்பரன் அவர்களும், மாற்றுஅரசியலின் அவசியம் குறித்து இரா.மயூதரன்அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியானசெயற்பாடுகள் குறித்து எஸ்.சோமசுந்தரம்அவர்களும் உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வில் கதிரவெளி பகுதி மக்கள், சமூகசெயற்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + four =

*