;
Athirady Tamil News

மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்து.!! (படங்கள்)

0

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மெற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடப்படாத மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர். கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதியில் பிரதேச மக்கள் மண்ணகழ்வை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து வந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த பொலிசார் மண்ணகழ்வை நிறுத்துவதாக தெரிவித்ததாக தெரிவித்த மக்கள், தொடர்ந்தும் மண்ணகழ்வு மெற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடினர்.

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தே மக்கள் அங்கு சென்றிருந்தனர். குறித்த மக்களுடன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் அங்கு சென்றிருந்தார். இதன்புாது பொலிசாருக்கும் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கலந்துரைாயாடலும் இடம்பெற்றது.

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடர்ந்து, மண்ணகழ்வை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதன்போது மக்கள் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறிதரன் ஆகியுார் ஊடகங்களிற்கு கரு்தது வெளியிட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 1 =

*