;
Athirady Tamil News

துப்பாக்கிகளுடன் மூவர் கைது!!!

0

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவளவ தேசிய வனப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து போரா 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − four =

*