;
Athirady Tamil News

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில்!!

0

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கை வெளியிடப்படும் இறுதி தினம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆகஸ்ட மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் குறித்த அறிக்கையை வெளியிட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை வெ ளியிடப்படும் திகதி தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 24 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஒன்று கூடவுள்ளமை குறிப்படத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*