;
Athirady Tamil News

தொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி!!

0

தொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடும் மோசடிக் காரர்களும் உண்டு.

இவ்வாறான மோசடிக் காரர்களிடம் யாழ்ப்பாண பாடசாலை அதிபர் ஒருவர் சிக்கியதுடன், 92,000 ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபரை கடந்த வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் அவருக்கு 8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மெய்மறந்த அதிபரை, உடனடியாக தமக்கு 92,000 ரூபாய் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி மோசடிக்காரர்கள் நம்ப வைத்தனர்.

இதையடுத்து நெல்லியடியிலுள்ள கொமர்ஷல் வங்கிக் கிளையில் 92,000 ரூபாய் பணத்தை செலுத்தினார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், மேலும் இரண்டரை இலட்சம் ரூபாயை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிபர், மீளவும் அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 7 =

*