;
Athirady Tamil News

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது இரகசிய பொலிஸார் சார்ப்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சந்தேக நபரான ஹேமசிறி பெர்ணான்டோவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள விட்டதாகவும் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றும் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் இரு பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்க தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிரதி சொலிஸ்டர் ஜெனரலிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்துவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*