;
Athirady Tamil News

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை!! (படங்கள்)

0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை ஒன்று இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை 9.30 மணியளவில் சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சபையினால் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய 15 விடயங்களை உள்ளடக்கி குறித்த நடமாடும் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய முதலாவது நடமாடும் சேவையாக குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீதி அபிவிருத்தி, கழிவகற்றல், ஆயுள்வேத மருத்துவம், வர்த்தக நிலையங்களிற்கான அனுமதி வழங்கல், சுகாதார பரிசோதனை, ஆதனவரி தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இன்றய நடமாடும் சேவையின் ஊடாக மக்களிற்கு வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 1 =

*