;
Athirady Tamil News

2019 ஜூன் மாத பண வீக்கம் 2.1% !!

0

2019 ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு.) பற்றிய அறிக்கையை வெளியிடுகையில் தொகை மதிப்பு, புள்ளிவிபரப் பணிப்பாளர் நாயகம், தே.நு.வி.சு. அடிப்படையான வருடத்தின் மீது வருட மாற்றத்தினால் (கடந்த வருடத்தின் அதே மாத தே.நு.வி.சு. மீது நடப்பு மாத தே.நு.வி.சு. இல் சதவீத மாற்றம்) அளவிடப்பட்டவாறு முதன்மைப் பண வீக்கமானது 2.1% ஆக கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

2019 மே மாதம் பொருட்டு பதிவாகிய முதன்மைப் பணவீக்கம் 3.5% ஆக இருந்தது. 2019 ஜூன் மாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணவீக்கத்திற்கான பங்களிப்புகள் முறையே – 1.3%, 3.4% ஆக காணப்பட்டன. 2018 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவுப் பிரிவு சதவீதத்தில் குறைந்த பதிவுக்கான பிரதான காரணம் 2019 இந்த ஜூன் மாதத்தில் நிலவிய குறிப்பாக தேங்காய், மரக்கறி மற்றும் அரிசி விலைகளில் நிலவிய குறைந்த விலை மட்டங்களாகும். அதேவேளை, 2.5% முதன்மைப் பணவீக்கத்தின் பெறுபேறாக 2018 ஜூன் மாதத்தில் பண வீக்கத்திற்கான இந்த இரு பிரிவுகளிலினதுமான பங்களிப்புகள் முறையே 0.3%, 2.3% ஆக காணப்பட்டன.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு.) மாதம் மீது மாத மாற்றங்களை ஒப்பிடுகையில் 2019 மே மாதத்தில் பதிவாகிய 128.7 இருந்து 2019 ஜூன் மாதத்தில் 129.2 ஆக அதிகரித்துள்ளது. இது, 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஜூன் மாதத்தில் 0.5 சுட்டெண் புள்ளி அதாவது 0.4 சதவீத அதிகரிப்பு ஒன்றைக் காட்டுகிறது. இந்த மாதம் மீது மாத மாற்றத்திற்கான காரணம், உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.37% இனாலும் உணவல்லாப்பொருட்களின் செலவுப் பெறுமதி 0.05% இனாலும் அதிகரித்தமையேயாகும்.

உணவுப்பொருட்களின் அதிகரித்த செலவுப் பெறுமதிகள் புதிய மீன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், அரிசி, உருளைக்கிழங்கு, எலுமிச்சம்பழம், கருவாடு, பால் மா மற்றும் வாழைப்பழம் என்பன பொருட்டு பதிவாகின. எனினும், உணவுப் பொருட்களின் குறைந்த செலவுப் பெறுமதிகள் மரக்கறி, தேங்காய், கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன பொருட்டு பதிவாகின.

முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஜூன் மாதத்தில் உணவல்லாப்பொருட்களின் செலவுப் பெறுமதியின் அதிகரிப்புக்கு காரணம், ´போக்குவரத்து´ (எரிபொருள் விலைகள் மற்றும் விமானக் கட்டணங்கள்), ´உணவகமும் ஹோட்டல்களும்´, ´தளபாடம், குடித்தன உபகரணம் மற்றும் வழமையான குடித்தன பராமரிப்பு´ அத்துடன் ´ஆடையும் காலணியும்´ ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட செலவுப் பெறுமதிகளின் அதிகரிப்பேயாகும். எனினும், முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் செலவுப் பெறுமதியில் குறைவு ´அற்ககோல் பானங்கள், புகையிலை ரூ தியக்கமருந்துகள்´ (வெற்றிலை) பிரிவு பொருட்டு பதிவாகியது. மேலும், ´நானாவிதப் பொருட்களும் சேவைகளும்´ பிரிவு பொருட்டு செலவுப் பெறுமதியில் ஓரளவு சற்று குறைவு பதிவாகியது.

அதேநேரம், வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு, ஏனைய எரிபொருள்கள்´, ´சுகாதாரம்´, ´தொடர்பாடல்´, ´பொழுதுபோக்கும் கலாசாரமும்´ மற்றும் ´கல்வி´ போன்ற பிரிவுகளின் செலவுப் பெறுமதிகள் இம்மாதத்தில் மாற்றமின்றி காணப்பட்டன.

2019 ஜூன் மாதத்திற்கான தே.நு.வி.சு. அடிப்படையான வருடத்தின் மீது வருட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறு பொருளாதாரத்தில் தளம்பலுறும் உணவு, வலு மற்றும் போக்குவரத்து போன்றன தவிர்ந்த மூலாதார பணவீக்கத்தை பிரதிபலிக்கும் மையப் பணவீக்கமானது, 2019 மே மாதத்தில் பதிவாகிய 6.3% இருந்து 6.1%வரை குறைந்தது.

ஐ. ஆர். பண்டார – பணிப்பாளர் நாயகம்.
தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*