;
Athirady Tamil News

வாரணாசியில் பல்கலைக்கழக மாணவியை சுட்டுக் கொன்ற ஓட்டல் உரிமையாளர்..!!

0

வாரணாசியின் சிங்ரா பகுதியில் மகாத்மா காந்தி காசி பித்யாபீட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகில் ஒரு தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு இன்று ஸ்வேதா என்ற மாணவி (வயது 22) சென்றுள்ளார். அப்போது அங்கு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் அமித் சிங், மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், மாணவி ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக வந்த மாணவி ஸ்வேதா, நேற்று இரவு தோழியின் வீட்டில் தங்கியதாகவும், நேற்று இரவு தங்களுடன் பேசியதாகவும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*