;
Athirady Tamil News

பிரான்ஸ் ஒயின் பிரியர்களுக்கு ஒரு சோகமான செய்தி..!!

0

பிரான்சில் வெப்ப அதிகரிப்பால் ஒயின் தயாரிப்பு பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் 2018ஆம் ஆண்டைவிட ஒயின் தயாரிப்பு 6 முதல் 13 சதவிகிதம் பாதிக்கப்படும் என வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிலவி வரும் அதீத வெப்பமாகும்.

உலகின் தலைசிறந்த ஒயின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான பிரான்ஸ், மோசமான சீதோஷ்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் காணப்பட்ட அதீத வெப்பம் மற்றும் பிற காரணிகளால் 42.8 முதல் 46.4 மில்லியன் ஹெக்டோலிற்றர்கள் மட்டுமே ஒயின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான அளவாகும். பாதகமான சீதோஷ்ண நிலை, பிரான்சின் Val de Loire, Charente மற்றும் Bordelais ஆகிய பகுதிகளில் திராட்சைக் கொடிகளின் மலரும் பருவத்தை பாதித்துள்ளது.

தென் பிரான்சில், சில பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு 46 டிகிரி செல்ஷியசை தொட்டது.

இது போதாதென்று ஆலங்கட்டை மழையும் தன் பங்கிற்கு ஆட்டம் போட்டாலும், அதனால் தேசிய அளவில் குறைவான சேதமே ஏற்பட்டது.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் வெயில் வாட்டி எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − two =

*