;
Athirady Tamil News

வவுனியாவில் இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்பு!

0

வவுனியாவில் இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து இன்று (22) இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இதன்போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81 எம். எம். குண்டுகள் 11, ரி. 56 துப்பாக்கி மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேர்ணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 10 =

*