;
Athirady Tamil News

யாழ்.ஆயரின் உரை வரலாற்றில் பதிவிடப்படும்!!

0

தமிழ் மக்கள் ஒருபோதும் மதத்தால் பிளவுபட்டிருந்தவர்கள் அல்ல. தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய மதங்கள் அவர்களிடையே பேதங்களை ஏற்படுத்தவில்லை.

தவிர, விடுதலைப் புலிகளும் மதசார்பு என்பதற்கு இம்மியும் இடம் கொடுக்காமல் இருந்தனர்.

அப்போதெல்லாம் மதங்கள் தமிழினத்தை வலுப்படுத்தினவேயன்றி பிளவுபடுத்த வில்லை.

ஆனால் இன்றைய நிலைமை வேறுவிதமாக உள்ளது. தமிழ் இனத்தைப் பிளவுபடுத்து கின்ற இலக்கை நோக்காகக் கொண்டு மதவாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த முன்வைப்பு மன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளது. மன்னாரில் ஆரம்பித்த மத பேதமைக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் உள்ளது.

மன்னாரில் இருக்கக்கூடிய அரச நிர்வாகம் ஒரு மதத்தலைவரின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகக் கூறப்படுகிறது எனும்போது, இதற்குப் பின்னால் எத்தனை கோடி ரூபாய்கள் சுழற்சிப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.

இதுதவிர, மன்னார் திருக்கேதீச்சரவளைவை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை மீண்டும் அதனை இரத்துச் செய்திருக்கிறது.

முஸ்லிம் இனம் சார்ந்தவரே அந்தப் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கிறார்.

திருக்கேதீச்சர வளைவை அமைப்பதற்கு அனுமதி கொடுத்த பின்னர் அதனை இரத்துச் செய்யும்படி மன்னார் ஆயர் கூறினார் என்பதற்காக அனுமதியை இரத்துச் செய்வது என் றால் இஃது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை விட பயங்கரமானதாகும்.

சட்டதிட்டங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மன்னார் ஆயர் கூறி விட்டார் என்பதற்காக அந்த அனுமதியை இரத்துச் செய்வதெனும்போது இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய எழுதப்படாத உடன்படிக்கை, ஒப்பந்தங்கள் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை சாமானியர்களும் புரிந்து கொள்வர்.

எனவே இது விடயங்களில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மன்னாரில் இருக்கக் கூடிய இந்து மக்களை இலக்கு வைத்துக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அனுமானிக்க வேண்டிய நிலைமை இன்றைய சூழ்நிலையில் உள்ளது.

இவை ஒருபுறமிருக்க, நானாக இருந்தால் திருக்கேதீச்சர வளைவை அமைக்க அனு மதித்திருப்பேன் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கூறியுள்ளார்.

அவர் கூறியது தொடர்பில் சைவ – கத்தோலிக்க மக்கள் ஆச்சரியமடையமாட்டார்கள்.
ஏனெனில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் சிந்தனை தமிழினத்தின் ஒற்றுமை என்பதுதான்.

எனவே சமயத்தால் தமிழினம் பேதப்படுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அத னால் தான் திருக்கேதீச்சர வளைவை அமைப்பது தொடர்பில் தான் எதிர்வாதம் புரியமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

உண்மையில் திருக்கேதீச்சர வளைவு என்பது ஒரு பெரும் விடயமல்ல. அது சாதா ரணமானது.

ஆனால் அதனை எதிர்த்தபோது நிலைமை பூதாகரமாகிவிட நம் தமிழினம் தடக்குப்படு கிறது.

இந்த நிலைமையை மாற்றி தமிழ் மக்களின் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக யாழ்.ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அப்போதும் இப்போதும் கூறியவை நிச்சயம் வரலாற்றுப் பதிவில் இடம்பெறும்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 11 =

*