;
Athirady Tamil News

வவுனியாவில் 450 ஏக்கர் காடு அழிப்பு!

0

வவுனியாவில் 450 ஏக்கர் காடு அழிப்பு! முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை?

வவுனியா சூடுவெந்தபுலவில் 450 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சூடுவெந்த புலவில் வசித்துவரும் 100 குடும்பங்களை சேர்ந்த 432 நபர்களுக்கு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தினூடாக காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்களை சேர்ந்த 18 வயது நிரம்பிய ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஏக்கர் வீதம் வாழ்வாதாரம் என்ற போர்வையில் காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்படாத நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் தனிப்பட்ட முயற்சியில் காணிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

செட்டிக்குளம் பிரதேச செயலாளரினால் முதற்கட்டமாக 142 நபர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வெகு விரைவில் மீதி காணிகளுக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு பகுதியில் 1500 ஏக்கர் காடுகள் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்டபட்ட பகுதியில் அறவே காணியற்ற 486 தமிழ் குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளதுடன் வவுனியாவில் காணிகள் வழங்கப்படும் போது தமிழ் மக்களையும் கருத்தில் எடுத்து விகிதாசார முறையில் காணிகள் வழங்க மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 9 =

*