;
Athirady Tamil News

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒலுமடு வனபரிபாலன அலுவலக பிரிவுக்குட்பட்ட துணுக்காய் வனபரிபாலன பிரிவின் ஐயன்குளம் வனப் பகுதியில் இடம்பெறவிருந்த மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை அறுத்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை வனவளத் திணைக்கள அதிகாரிகளை கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் வாகனமும் முதிரைக் குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு வன பரிபாலன அலுவலர் ஆர்.எஸ். டபிள்யூ திசாநாயக்கவின் வழிகாட்டலில் துணுக்காய் பிரதேச வன அதிகாரிகளான ஆர்.குணசேகர, எம்பத்திராஜா, என்.பத்மசிறி ஆகிய மூவரும் இந்த மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமாக காடழிப்பு மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் அகழ்வு, கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு மற்றும் மர வியாபாரம் என்பவற்றுக்காக இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eight =

*