;
Athirady Tamil News

விமான பணிப்பெண் மீது ஆசை! விமானம் கிளம்புவதை தடுக்க 65 வயது முதியவர் செய்த மோசமான செயல்..!!

0

செரிபியாவில் இருந்து ஜேர்மனிக்கு கிளம்பவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செரிபியாவின் தலைநகர் பெல்கிரேடிலிருந்து 130 பயணிகளுடன் ஒரு விமானம் ஒன்று ஜேர்மனிக்கு கிளம்ப தயாரானது.

அப்போது விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்த நிலையில் குறித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் பேசியவர் கூறினார்.

இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் கீழே இறக்கப்பட்டு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது புரளி என தெரியவந்தது.இதையடுத்து விமான நிலையத்துக்கு போன் செய்த நபரை போன் நம்பரை வைத்து பொலிசார் கைது செய்தனர்.

அந்த 65 வயதான நபர் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் இரண்டு பெண்களை நான் ஒரு முறை பார்த்து என்னுடன் உணவருந்த அழைத்தேன்.

ஆனால் அவர்கள் என்னுடன் வர மறுத்தார்கள், பின்னர் அதில் ஒரு பெண் தங்கியிருக்கும் ஹொட்டலை கண்டுபிடித்து அங்கு போய் விசாரித்தேன்.அப்போது தான் அவர் ஜேர்மனி செல்லும் விமானத்தில் செல்லவுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவர் நாட்டை விட்டு கிளம்புவதை தடுக்க நினைத்தே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த நபரை 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர் செய்த தவறுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 9 =

*