;
Athirady Tamil News

திருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்த நபர் மாட்டினார்!!

0

வீடொன்றில் வேலைக்காக தங்கியிருந்த நபர், அங்கிருந்து பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் நடந்துள்ளது.

குறித்த நபர் திருடிய ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 12 =

*